அமெரிக்காவில் வசிக்க போலி கொள்ளை நாடகம் ஆடிய 11 இந்தியர்கள் அதிரடி கைது
March 14, 2026

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 இந்தியர்கள் விசா மோசடி புகாரில் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டினருக்கான ‘யு’ விசாவைப் பெறுவதற்காக இவர்கள் திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதற்காக பெரிய மளிகைக் கடைகளில் போலி ஆயுதங்களைக் காட்டி கொள்ளை நடந்தது போல இவர்கள் நாடகமாடியது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாங்கள் ஒரு குற்றச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி தங்குவதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற இவர்கள் முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ‘யு’ விசா மூலம் அமெரிக்க குடியுரிமை பெற வாய்ப்புள்ளதால், அத்தகைய வசதியைப் பயன்படுத்திக் கொள்ள இந்த இந்தியர்கள் இவ்வாறான விபரீதச் செயலில் ஈடுபட்டு சிக்கியுள்ளனர்.