அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் கொலையை தொடர்ந்து வடகொரியாவுக்கு ஆபத்தா

ஈரான் மற்றும் வெனிசுலா நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. எதிரி நாட்டின் தலைவரை மட்டும் குறிவைத்து அழிக்கும் ‘Decapitation’ எனும் உத்தியை டிரம்ப் அரசு தற்போது கையில் எடுத்துள்ளது. ஈரான் உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அடுத்த இலக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த ஆதிக்க மனப்பான்மை மற்றும் தலைவர்களைக் குறிவைக்கும் போக்கு வடகொரியாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஏற்கனவே அணு ஆயுதங்களால் அமெரிக்காவை மிரட்டி வரும் கிம் ஜாங் உன், இந்தச் சூழலில் ஏதேனும் தாக்குதலுக்கு உள்ளானால் அது ஒரு மிகப்பெரிய போராக வெடிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வடகொரியாவின் பாதுகாப்பு குறித்த கவலைகள் தற்போது அந்நாட்டு எல்லைகளில் அதிகரித்துள்ளன.