அமெரிக்காவிடம் இருந்து 2026 உலகக்கோப்பை பறிபோகிறதா ஈரான் விவகாரத்தில் டிரம்ப் கருத்தால் பரபரப்பு

அமெரிக்காவிடம் இருந்து 2026 உலகக்கோப்பை பறிபோகிறதா ஈரான் விவகாரத்தில் டிரம்ப் கருத்தால் பரபரப்பு

2026 பிபா உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஈரான் கால்பந்து அணியின் பாதுகாப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவிடமிருந்து உலகக்கோப்பை நடத்தும் வாய்ப்பு பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாவிட்டால், போட்டியை வேறு பாதுகாப்பான நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

பிபா விதிகளின்படி, நடத்தும் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் போட்டிகளை மாற்ற முடியும். இந்த உலகக்கோப்பை அமெரிக்காவுடன் இணைந்து கனடா மற்றும் மெக்சிகோவிலும் நடப்பதால், ஈரானின் போட்டிகள் அங்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பிபா கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *