அபுதாபியில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்தியர் உட்பட இருவர் பலி

அபுதாபியில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்தியர் உட்பட இருவர் பலி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரை இலக்கு வைத்து ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் மற்றும் பாகிஸ்தானியர் என இருவர் உயிரிழந்தனர். அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் விழுந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்தது.

இந்த விபத்தில் மற்றொரு இந்தியர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். இதுவரை நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை முறியடித்துள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு உறுதிபடக் கூறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *