அனுமன் சாலிசா: இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. பஜரங்பலி கோபத்திற்கு ஆளாக நேரிடும்!
February 10, 2026

செவ்வாய்க்கிழமை என்றாலே அது ஆஞ்சநேயருக்கு உகந்த நாள். அன்றைய தினம் பக்தர்கள் விரதமிருந்து அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது வழக்கம். தீராத பயம், நோய்கள் மற்றும் சனி தோஷங்களில் இருந்து விடுபட அனுமன் சாலிசா ஒரு கவசமாகத் திகழ்கிறது. இருப்பினும், அனுமன் சாலிசாவை ஓதும்போது சில கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இல்லையெனில், அதன் முழு பலனும் கிடைக்காமல் போவதுடன் அனுமனின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும்.
எந்த நேரங்களில் அனுமன் சாலிசாவைத் தவிர்க்க வேண்டும்?
சாஸ்திரங்களின்படி, ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஒழுக்கம் மிக முக்கியமானது. அனுமன் சாலிசா ஓதுவதை தவிர்க்க வேண்டிய சில முக்கிய சூழல்கள் இதோ:
- மதிய நேரம்: மதிய வேளையில் அனுமன் சாலிசா பாராயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அந்த நேரத்தில் அனுமன் இலங்கையில் இருப்பார் என்பது ஐதீகம்.
- தீட்டு காலங்கள்: குடும்பத்தில் யாராவது இறந்தால், இறுதி சடங்குகள் மற்றும் தீட்டு காலம் முடியும் வரை அனுமன் சாலிசா படிக்கக்கூடாது அல்லது சிலைகளைத் தொடக்கூடாது. அதேபோல், வீட்டில் குழந்தை பிறந்தாலும் குறிப்பிட்ட காலம் வரை (சூதகம்) பாராயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- மாதவிடாய் காலம்: பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் அனுமன் சாலிசாவை ஓதக்கூடாது. ஆனால், மனதிற்குள் அனுமனை நினைத்து தியானம் செய்யலாம்.
- அசைவ உணவு மற்றும் போதை: அனுமன் ஒரு பிரம்மச்சாரி. எனவே, மது அருந்திய பிறகோ அல்லது அசைவ உணவு உட்கொண்ட பிறகோ அனுமன் சாலிசா படிப்பது மகா பாவமாகக் கருதப்படுகிறது.
- அழுக்கு உடைகள்: குளிக்காமல் அல்லது அழுக்கு ஆடைகளை அணிந்துகொண்டு ஒருபோதும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யக்கூடாது. தூய்மையான உடல் மற்றும் மனதுடன் மட்டுமே அவரை வழிபட வேண்டும்.
அனுமன் சாலிசாவை முறையாகவும், தூய்மையாகவும் பாராயணம் செய்வதன் மூலமே அனுமனின் முழுமையான அருளைப் பெற முடியும்.