அதிமுக – பாஜக கூட்டணி உறுதி: சிவி சண்முகத்திற்கு இணை அமைச்சர் பதவி?

அதிமுக – பாஜக கூட்டணி உறுதி: சிவி சண்முகத்திற்கு இணை அமைச்சர் பதவி?

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு சந்தித்தது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் வலுப்பெற்றது.

இந்த கூட்டணியை உறுதிப்படுத்த பாஜக மேலிடம், அதிமுகவிற்கு மத்திய இணை அமைச்சர் பதவியை வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் தற்போதைய ராஜ்யசபா எம்பி சிவி சண்முகத்துக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எம்பி தம்பிதுரை பதவிக் காலம் விரைவில் முடிவடைவதால், சிவி சண்முகத்துக்கு இந்த பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதிமுக மற்றும் பாஜக இடையே நீடித்த கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, இக்கூட்டணி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவை இடம் என்பது இந்த கூட்டணியின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *