அண்ணாமலை வைத்த புகாரால் அதிரடி நடவடிக்கை? கரூர் உட்பட நான்கு மாவட்ட எஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம்

அண்ணாமலை வைத்த புகாரால் அதிரடி நடவடிக்கை? கரூர் உட்பட நான்கு மாவட்ட எஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம்

கரூர் மாவட்ட எஸ்பி பாரபட்சமாக செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் புதிய எஸ்பியாக ஹரிகிரண் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்யும் நோக்கில் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *