அடிக்கடி கோபம் வருகிறதா உடலில் இந்த சத்துக்கள் குறைவாக இருந்தால் கூட மனநிலை மாறலாம்
March 11, 2026

அதிகப்படியான எரிச்சல் அல்லது கோபம் எப்போதும் மன அழுத்தத்தால் ஏற்படுவதில்லை. உடலில் மெக்னீசியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவதால் மூளையின் வேதியியல் சமநிலை பாதிக்கப்பட்டு மனநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
இப்பிரச்சினையை தவிர்க்க கீரை வகைகள், முட்டை, கடல் மீன் மற்றும் உலர் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். முறையான உணவுப் பழக்கம் மற்றும் மருத்துவரின் ஆலோசனை மூலம் உடல் சத்துக்களை சமநிலைப்படுத்துவது மனநிலையை சீராக வைக்க உதவும்.