அஜித் பவார் விமான விபத்து ராஜீவ் காந்தி பாணி கொலையா என்சிபி எம்எல்ஏ எழுப்பிய அதிரடி கேள்வி

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக சதித் திட்டம் இருக்கலாம் என என்சிபி (எஸ்பி) எம்எல்ஏ அமோல் மிட்காரி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விபத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை போன்ற ஒரு திட்டமிட்ட சதியா என்றும், விமானி சுமித் கபூர் தற்கொலை படை தீவிரவாதியாக செயல்பட்டாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிளாக் பாக்ஸ் தரவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என சந்தேகம் கிளப்பியுள்ள நிலையில், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சிஐடி மற்றும் டிஜிசிஏ விசாரணையுடன் இணைந்து சிபிஐயும் இந்த விபத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை கண்டறியும் என அவர் உறுதி அளித்துள்ளார்.