அஜித் குமாருக்கு மகேந்திரா கொடுத்த மாஸ் கிப்ட் என்ன தெரியுமா

அஜித் குமாருக்கு மகேந்திரா கொடுத்த மாஸ் கிப்ட் என்ன தெரியுமா

கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் அஜித் குமாருக்கு மகேந்திரா நிறுவனம் தனது புதிய ‘பிஇ 6 ஃபார்முலா எடிசன்’ எலக்ட்ரிக் எஸ்யூவி காரைப் பரிசாக வழங்கியுள்ளது. மகேந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர். வேலுசாமி இந்த அதிநவீன காரை அஜித்திடம் நேரில் ஒப்படைத்தார். உலகின் முதல் ஃபார்முலா தீம் கொண்ட இந்த மின்சார கார் மணிக்கு 202 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

தற்போது ‘அஜித் குமார் ரேஸிங்’ அணியை வழிநடத்தி வரும் அவர் துபாயில் பந்தயங்களை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய நிலையில் இந்த கௌரவம் கிடைத்துள்ளது. 79 kWh பேட்டரி திறன் கொண்ட இந்த கார் எவரஸ்ட் ஒயிட் மற்றும் ஸ்டீல்த் பிளாக் உள்ளிட்ட நான்கு நிறங்களில் கிடைக்கிறது. கார் பந்தயங்கள் மீது அஜித் கொண்டுள்ள தீராத ஆர்வத்தை பாராட்டும் வகையில் இந்த சிறப்பு எடிசன் கார் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *