அசிடிட்டி மருந்தில் புற்றுநோய் அபாயம்! பிரபல மாத்திரை குறித்து FDA வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அசிடிட்டி மருந்தில் புற்றுநோய் அபாயம்! பிரபல மாத்திரை குறித்து FDA வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வயிற்று எரிச்சல் அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக நிவாரணம் பெற பலர் தொடர்ந்து ஆன்டாசிட் மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள சில ஆன்டாசிட்களில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க சுகாதார அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ரெனிடிடின் (Ranitidine) வகை ஆன்டாசிட் மருந்துகளில் என்-நைட்ரோசோடைமெதிலமைன் (NDMA) என்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக FDA தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இந்த மருந்து இடம்பெற்றிருந்தாலும், இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்திய மத்திய சுகாதார அமைச்சகமும், உள்நாட்டுச் சந்தையில் உள்ள ரெனிடிடின் மருந்துகளைச் சரிபார்க்க அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *