அக்னிவீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! பிஎஸ்எஃப் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு – மத்திய அரசு அதிரடி

அக்னிவீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! பிஎஸ்எஃப் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு – மத்திய அரசு அதிரடி

பிஎஸ்எஃப் (BSF) எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையில் அக்னிவீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கான்ஸ்டபிள் பணியிடங்களில் சரிபாதி இடங்கள் முன்னாள் அக்னிவீரர்களுக்கே ஒதுக்கப்படும். புதிய விதிகளின்படி, இந்த நியமனங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

முதற்கட்டத்தில் நோடல் படை மூலம் அக்னிவீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர். இரண்டாம் கட்டத்தில் மீதமுள்ள 47 சதவீத இடங்களுக்குப் பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் தேர்வுகள் நடக்கும். டிசம்பர் 18 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த அதிரடி மாற்றம், அக்னிவீரர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு குறித்த அச்சத்தைப் போக்கி பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *