அக்சர் படேலை ஓரங்கட்டியது இந்திய அணியின் மிகப்பெரிய தவறா விளாசும் அஸ்வின்
February 23, 2026

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான படுதோல்விக்கு பிறகு இந்திய அணியின் தேர்வு முறையை ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். ஃபார்மில் இருந்த அக்சர் படேலை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை சேர்த்தது தவறான உத்தி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த முடிவு இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அக்சர் படேல் அணியின் ’24 கேரட் தங்கம்’ போன்றவர் என்று புகழாரம் சூட்டிய அஸ்வின், அவரை வெளியில் உட்கார வைத்தது துரதிர்ஷ்டவசமானது என்றார். சுந்தரை அணியில் எடுத்தும் அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்காதது நிர்வாகத்தின் குழப்பத்தையே காட்டுகிறது என்றும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் காட்டமாகப் பேசியுள்ளார்.