அகமதாபாத் விமான விபத்து: இது சதியா? காக்பிட்டில் நடந்த அதிர்ச்சி பின்னணி!

அகமதாபாத் விமான விபத்து: இது சதியா? காக்பிட்டில் நடந்த அதிர்ச்சி பின்னணி!

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்து ஒரு சாதாரண இயந்திரக் கோளாறு அல்ல, மாறாக திட்டமிடப்பட்ட நாசவேலை என்ற அதிர வைக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 260 பேரின் உயிரைப் பறித்த இந்த கோர விபத்து குறித்து இத்தாலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை அறிக்கையின்படி, விமானத்தின் இன்ஜின் தானாக முடங்கவில்லை; மாறாக காக்பிட்டிற்குள் இருந்த யாரோ ஒருவர் திட்டமிட்டு எரிபொருள் சுவிட்சை (Fuel Switch) அணைத்துள்ளது தெரியவந்துள்ளது. விமானத்தின் பிளாக் பாக்ஸ் (Black Box) தரவுகளும், இரண்டு இன்ஜின்களும் மேனுவலாக (Manually) அணைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.

விபத்திற்கு முன்னதாக விமானிகளின் உரையாடல்கள் மிகவும் மர்மமான முறையில் இருந்ததாகத் தெரிகிறது. இது ஒரு மிகப்பெரிய சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் எதிரொலியாக, விமானிகளின் மனநலம் குறித்த விரிவான பரிசோதனைகளை சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) இனி கட்டாயமாக்க உள்ளது. இந்த சம்பவம் வான்வழிப் பயணத்தின் பாதுகாப்பு குறித்து பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த இறுதி அறிக்கை இன்னும் 24 மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *