அகமதாபாத்தில் நேரிட்ட கோரத் தீ விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழப்பு
February 24, 2026

குஜராத் மாநிலம் அகமதாபாத் வேஜல்பூர் பகுதியில் உள்ள கிருஷ்ண நகரி சொசைட்டியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் துருவ் கோஹில் மற்றும் அவரது மகன் சாஷ்வத் ஆகியோர் உயிரிழந்தனர். தூக்கத்தில் இருந்தபோது வீடு முழுவதும் தீ பரவியதால் இந்த சோகம் நிகழ்ந்தது. தீக்காயமடைந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.