சமூக வலைதளங்களில் இனி கேஒய்சி கட்டாயம் போலி கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடாளுமன்றக் குழு அதிரடி பரிந்துரை

இந்தியாவில் சமூக வலைதள பயன்பாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி கணக்குகள், அடையாளத் திருட்டு மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், பயனர்களின் கணக்குகளுக்கு கேஒய்சி (KYC) சரிபார்ப்பைக் கட்டாயமாக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. டிஜிட்டல் தளங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இது ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இந்த அறிக்கையில் பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் முறையைக் கடுமையாக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சைபர் துன்புறுத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த நடைமுறை அவசியம் என்று குழு கருதுகிறது. இப்புதிய விதிகள் அமலுக்கு வந்தால், போலி முகவரிகள் மூலம் சமூக வலைதளங்களில் தவறான செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும். இதன் மூலம் இணையப் பயன்பாடு மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.