டிரம்பின் மார் ஏ லாகோ இல்லத்தில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் சுட்டுக்கொலை
February 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புளோரிடா இல்லத்திற்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். அதிகாலை வேளையில் ஷாட்கன் மற்றும் எரிபொருளுடன் வந்த அந்த நபர் பாதுகாப்பு வளையத்தை மீறியபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பவத்தின் போது டிரம்ப் அங்கு இல்லை.
இந்த விவகாரம் குறித்து எஃப்பிஐ மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, இந்த ஊடுருவல் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.