ஹொங்கொங்கில் 100-ஆண்டு பழமையான வெடிகுண்டு மீட்பு; 6000 பேர் வெளியேற்றம்

ஹொங்கொங்கில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது, இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட சுமார் 100-ஆண்டு பழமையான, 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1.5 மீட்டர் நீளமுள்ள இந்த வெடிகுண்டு வெடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட அதிகாரிகள், 18 கட்டிடங்களில் வசித்த சுமார் 6000 பேரை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.
போலீசாரும் வெடிகுண்டு நிபுணர் குழுவும் இணைந்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர். கடந்த காலங்களில் கூட, ஹொங்கொங்கில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டில், வான் சாய் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட ஒரு வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய 20 மணி நேரமானது குறிப்பிடத்தக்கது.