ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக கைப்பற்றுகிறாரா டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் திரிபோலி போர் கப்பல்

ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக கைப்பற்றுகிறாரா டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் திரிபோலி போர் கப்பல்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை முறியடிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சக்திவாய்ந்த ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ (USS Tripoli) என்ற பிரம்மாண்ட போர்க்கப்பலை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த போர்க்கப்பலில் சுமார் 2,500 க்கும் மேற்பட்ட கமாண்டோ வீரர்கள் மற்றும் அதிநவீன எஃப்-35பி ரக போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. ஜப்பானில் இருந்து புறப்பட்டுள்ள இந்தப் படை நிலம் மற்றும் கடல் என இரு வழிகளிலும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. ஏற்கனவே இப்பகுதியில் அமெரிக்காவின் இரு பெரிய விமானம் தாங்கி கப்பல்கள் உள்ள நிலையில், இந்த புதிய நகர்வு ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் வெடிக்கும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *