ஸ்டைலை விட வலிமையே முக்கியம்! ஷாப்பிங் மால்களில் பிரவுன் பேப்பர் பேக்குகள் ஆதிக்கம் செலுத்துவது ஏன்?

ஸ்டைலை விட வலிமையே முக்கியம்! ஷாப்பிங் மால்களில் பிரவுன் பேப்பர் பேக்குகள் ஆதிக்கம் செலுத்துவது ஏன்?

உள்ளூர் மளிகைக் கடைகள் முதல் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்கள் வரை, இன்று எங்கும் பிரவுன் நிற காகிதப் பைகளே (Brown Paper Bags) நீக்கமற நிறைந்துள்ளன. வெள்ளை அல்லது இதர கவர்ச்சிகரமான நிறங்களை விட, இந்த மந்தமான பிரவுன் நிறத்தை வணிக நிறுவனங்கள் அதிகம் விரும்புவது ஏன்? இதன் பின்னணியில் இருக்கும் சுவாரசியமான காரணங்களை இங்கே காணலாம்.

இயற்கை இழைகளின் பலம்

காகிதம் இயற்கையிலேயே பிரவுன் நிறம் கொண்டது. அதனை வெள்ளை நிறமாக மாற்ற உற்பத்தியாளர்கள் ரசாயன ப்ளீச்சிங் (Bleaching) முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இந்த ப்ளீச்சிங் செயல்முறை காகிதத்தில் உள்ள இயற்கை இழைகளைச் சிதைத்து, அதன் வலிமையைக் குறைத்து மெல்லியதாக மாற்றிவிடும். ஆனால், ப்ளீச் செய்யப்படாத பிரவுன் பேப்பர்கள் தங்களின் அசல் வலிமையைத் தக்கவைத்துக்கொள்கின்றன. இதன் காரணமாகவே, கனமான பொருட்களைச் சுமக்கும்போது இவை எளிதில் கிழிந்து விடுவதில்லை.

மறுசுழற்சி மற்றும் சிக்கனம்

இந்த பைகள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டைப் பெட்டிகள் மற்றும் பழைய காகிதங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. பல்வேறு வகையான காகிதங்களை ஒன்றாகக் கூழாக்கப்படும்போது, அதன் நிறம் இயற்கையாகவே பிரவுன் நிறத்தில் அமைகிறது.

ப்ளீச்சிங் நிலையைத் தவிர்ப்பதன் மூலம் உற்பத்தியாளர்களுக்குப் பெருமளவு செலவு மிச்சமாகிறது. அதுமட்டுமின்றி, குறைவான ரசாயனங்களே பயன்படுத்தப்படுவதால் இது சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. இந்தச் செலவு சேமிப்பு மற்றும் நீடித்துழைக்கும் தன்மை காரணமாகவே சிறிய கடைகள் முதல் பெரிய பிராண்டுகள் வரை அனைத்தும் பிரவுன் பேப்பர் பேக்குகளைத் தேர்ந்தெடுக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *