வேலூரில் விஜய்யின் விஸ்வரூபம் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி மற்றும் கடும் கட்டுப்பாடுகள்
February 23, 2026

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து உரையாற்றுகிறார். 33 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த நிகழ்விற்கு காவல்துறை 20-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது. க்யூஆர் கோடுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ள 4900 நிர்வாகிகள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
பாதுகாப்பு கருதி முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க பிரம்மாண்ட பந்தல் மற்றும் 50,000 தண்ணீர் பாட்டில்கள் தயார் நிலையில் உள்ளன. தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வியூகம் குறித்து விஜய் இன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.