வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதால் வந்த வினை 23 ஆண்டுகால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது

வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதால் வந்த வினை 23 ஆண்டுகால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது

குஜராத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவது தொடர்பான மோதலால் 23 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் 2002-ல் திருமணம் செய்து கொண்டனர். மனைவி ‘சுவாமிநாராயண்’ பிரிவைப் பின்பற்றுவதால் வெங்காயம், பூண்டு தவிர்த்த உணவை விரும்பினார், ஆனால் கணவர் குடும்பத்தினர் அதைச் சாப்பிட்டதால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருகட்டத்தில் மாமியார் தனித்தனியாக சமைத்தும் இந்த விரிசல் குறையவில்லை.

குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மத நம்பிக்கைகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் உள்ள முரண்பாடுகளே இந்த பிரிவுக்குக் காரணம் என்று நீதிமன்றம் கவனித்துள்ளது. மனைவி விவாகரத்தை எதிர்க்கவில்லை என்றாலும், ஜீவனாம்சம் கோருவதில் ஆர்வம் காட்டினார். நீதிபதிகள் விஷேன் மற்றும் தாகூர் அடங்கிய அமர்வு, நீண்ட கால குடும்பத் தகராறைக் கருத்தில் கொண்டு விவாகரத்து உத்தரவைச் சரி என ஏற்றுக்கொண்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *