விலங்குகளுக்காக சிவந்த சாலைகள்! டென்மார்க்கின் அசத்தல் முயற்சி

விலங்குகளுக்காக சிவந்த சாலைகள்! டென்மார்க்கின் அசத்தல் முயற்சி

டென்மார்க்கில் உள்ள கிளாட்சாக்ஸே (Gladsaxe) நகரின் வீதிகள் இரவு நேரங்களில் அடர் சிவப்பு நிற ஒளியால் சூழப்பட்டு வருகின்றன. பார்ப்பதற்கு ஏதோ அறிவியல் புனைக்கதை படம் போலத் தோன்றினாலும், இதற்குப் பின்னால் ஒரு உன்னதமான சுற்றுச்சூழல் நோக்கம் உள்ளது.

சாதாரண வெள்ளை நிற மின்விளக்குகள் இரவு நேரங்களில் விலங்குகளின், குறிப்பாக வௌவால்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கின்றன. வெள்ளை ஒளியில் உள்ள குறைந்த அலைநீளம் (Wavelength) வௌவால்களின் திசையறியும் திறன் மற்றும் வேட்டையாடும் பழக்கத்தை சீர்குலைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதற்குத் தீர்வாகவே, நீண்ட அலைநீளம் கொண்ட இந்த சிவப்பு நிற விளக்குகளை அந்நகராட்சி பொருத்தியுள்ளது. இந்த சிவப்பு ஒளி வௌவால்களுக்கு எந்தத் தொந்தரவையும் தராது, அதே சமயம் மனிதர்களுக்கும் போதிய வெளிச்சத்தை வழங்குகிறது.

“ஒளி மாசுபாடு” (Light Pollution) உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க டென்மார்க் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு, உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *