விடியா திமுக அரசை வீழ்த்த திரண்டு வாருங்கள் என எடப்பாடி பழனிசாமி அதிரடி அழைப்பு

விடியா திமுக அரசை வீழ்த்த திரண்டு வாருங்கள் என எடப்பாடி பழனிசாமி அதிரடி அழைப்பு

தமிழகத்தில் பெருகிவரும் கஞ்சா புழக்கம், போதைப்பொருள் மாஃபியாக்களின் ஆதிக்கம் மற்றும் சீர்குலைந்த சட்டம்-ஒழுங்கை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், லாக்-அப் மரணங்களும் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இந்த ‘பொம்மை’ முதலமைச்சரின் நிர்வாகத்தை கண்டித்து, தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்ற பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் அலை அலையாக திரண்டு வர வேண்டுமென அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *