விசாரணைக் கைதி ஆகாஷ் மரண விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை இன்ஸ்பெக்டர் உட்பட 6 காவலர்கள் சஸ்பெண்ட்
March 14, 2026

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல் ஆய்வாளர் திலீபன் மற்றும் சார்பு ஆய்வாளர் குகன் உள்ளிட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் தாக்குதலால் தான் ஆகாஷ் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, விசாரணை தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்தினர் நீதிகோரி தொடர்ந்து போராடி வரும் நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.