விக்கிப்பீடியாவில் தவறான தகவல்களைத் தடுக்க ஐஐடி பேராசிரியர்களின் புதிய ஏஐ தொழில்நுட்பம்

விக்கிப்பீடியாவில் தவறான தகவல்களைத் தடுக்க ஐஐடி பேராசிரியர்களின் புதிய ஏஐ தொழில்நுட்பம்

விக்கிப்பீடியாவில் தகவல்களைத் தேடும்போது எழுத்துப்பிழை அல்லது பெயர்களில் ஏற்படும் சிறிய மாற்றங்களால் தவறான பக்கங்கள் திறக்கப்படும் ‘சர்ஃபேஸ் நேம் எரர்’ சிக்கலுக்கு ஐஐடி குவஹாத்தி பேராசிரியர்கள் தீர்வு கண்டுள்ளனர். கணினி அறிவியல் துறை பேராசிரியர் அமித் ஆயேகர் மற்றும் அவரது குழுவினர் பல மொழிகளில் இயங்கும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் இந்தத் தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டது. விக்கிப்பீடியாவில் தேடப்படும் தகவல்களில் சுமார் 3-6 சதவீத குழப்பங்கள் இத்தகைய பிழைகளால் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தப் புதிய தொழில்நுட்பம் பிழைகளை உடனுக்குடன் கண்டறிந்து திருத்துவதன் மூலம் பயனர்களுக்குத் துல்லியமான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *