வந்தே பாரத் தயிர் பாக்கெட்டில் நெளியும் புழுக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

வந்தே பாரத் தயிர் பாக்கெட்டில் நெளியும் புழுக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட தயிர் பாக்கெட்டில் உயிருள்ள புழுக்கள் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 15 அன்று பயணித்த ரித்தேஷ் சிங் என்பவர், தமக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதனை ஆதாரத்துடன் பதிவிட்டார். இந்த விவகாரம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே உணவின் தரம் குறித்து கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் சம்பந்தப்பட்ட உணவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டது. அந்நிறுவனத்திற்கான அபராதம் ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டதுடன், ஐஆர்சிடிசி நிர்வாகத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டியதற்காக எடுக்கப்பட்ட இந்த கடும் நடவடிக்கை உணவு விநியோகஸ்தர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *