வண்டலூர் உயிரியல் பூங்கா செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு மார்ச் 28 வரை சஃபாரி சேவைகள் ரத்து

வண்டலூர் உயிரியல் பூங்கா செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு மார்ச் 28 வரை சஃபாரி சேவைகள் ரத்து

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மார்ச் 18 முதல் மார்ச் 28 வரை சிங்கம் மற்றும் மான் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால், உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சஃபாரி சேவை ரத்து செய்யப்பட்டாலும், பூங்காவின் மற்ற பகுதிகளைப் பார்வையிடத் தடையில்லை. மார்ச் 29 முதல் மீண்டும் வழக்கம்போல வாகனங்கள் மூலம் சஃபாரி மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்த மாற்றத்தைக் கவனித்துத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *