ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது ஏன்
March 14, 2026

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எரிசக்தி கொள்கையில் அமெரிக்காவின் இரட்டை வேடத்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார். முன்பு ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க வேண்டாம் என இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா, தற்போது உலக சந்தையில் தட்டுப்பாட்டை தவிர்க்க இந்தியாவை எண்ணெய் வாங்குமாறு கெஞ்சுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எரிசக்தி விநியோகத்தை சீராக வைத்திருக்க வாஷிங்டன் தற்போது இந்தியாவுக்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது. அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு இந்திய எல்பிஜி கப்பல்கள் செல்ல அனுமதி கிடைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த திடீர் நிலைப்பாடு சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.