ரஜினி அரசியலுக்கு வராததற்கு திமுக காரணமா? திருமாவளவன் விளக்கம்

ரஜினி அரசியலுக்கு வராததற்கு திமுக காரணமா? திருமாவளவன் விளக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருக்க திமுக அச்சுறுத்தியது என்பது வெறும் கற்பனை என்று கூறினார். ரஜினி அதிகாரத்திற்கு மயங்குபவர் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

சங் பரிவார்களின் தலையீடு தனக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்தே அவர் அரசியலைக் கைவிட்டார் என்று திருமாவளவன் விளக்கமளித்தார். மேலும், இப்பகுதியில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக செயல்பட்ட ஆகாஷ் மரணத்தில் காவல்துறையினர் மற்றும் மருத்துவத்துறையின் அலட்சியத்தை சாடிய அவர், உரிய விசாரணைக்கும் வலியுறுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *