ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை பேச்சு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
March 16, 2026

திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக மிரட்டலால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அவர் கூறியதற்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இக்கருத்தை வன்மையாக கண்டித்துள்ளார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ஒரு மாபெரும் கலைஞரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல என்றும், இதற்காக ஆதவ் அர்ஜுனா உடனடியாக ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.