ஆரம்பக் கல்வியில் மனப்பாட முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் பின்லாந்து மாடல்
March 15, 2026

தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டு முதல் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகையில், மனப்பாட முறைக்கு மாற்றாக பின்லாந்து நாட்டைப் போல சிந்தித்து செயல்படும் திறன்சார் கற்றல் அறிமுகப்படுத்தப்படும் என்றார். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வதேச தரத்திலான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கல்வி மற்றும் புத்தக வாசிப்புக்கிடையே சமநிலை பேணப்படுவதுடன், கிராமப்புற மாணவர்களுக்கும் சமமான கற்றல் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். நீட் போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் படைப்பாற்றல் வளர்க்கப்படும். மாநிலக் கல்விக் கொள்கை 2025-ன் படி இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.