மேற்காசிய போர் பதற்றத்தால் இந்திய விமான சேவைகள் பத்து சதவீதம் குறைப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழலால் இந்திய விமான நிறுவனங்களின் கோடைக்கால உள்நாட்டு விமான சேவைகள் பத்து சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள புதிய அட்டவணைப்படி, வாராந்திர விமானங்களின் எண்ணிக்கை 25,610-லிருந்து 23,049-ஆக குறைய உள்ளது. மார்ச் 29 முதல் அக்டோபர் 24 வரை அமலில் இருக்கும் இந்த மாற்றத்தால் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படும்.
போர் காரணமாக வான்வெளி கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஏற்கனவே குளிர்கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச பதற்றம் காரணமாக கூடுதல் விமான ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பயண நேரம் அதிகரிப்பதோடு, வரும் நாட்களில் விமான கட்டணங்களும் உயரக்கூடும் என்று விமான போக்குவரத்து துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.