மெஸ்ஸி சிலை மற்றும் கொல்கத்தா குழப்பம்: மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கேள்வி!
December 22, 2025

லியோனல் மெஸ்ஸியின் கொல்கத்தா வருகையின் போது ஏற்பட்ட கடும் குழப்பம் குறித்து கல்கத்தா உயர் நீதிமன்றம் பொதுநல மனுக்களை விசாரித்தது. லேக் டவுனில் நிறுவப்பட்டுள்ள மெஸ்ஸியின் சிலை அரசு நிலத்தில் உள்ளதா அல்லது தனியார் நிலத்திலா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தனிப்பட்ட விருப்பத்திற்காக அரசு நிலத்தை பயன்படுத்த முடியுமா என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இந்த நிகழ்விற்கான நிதி ஆதாரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. எதிர்க்க தரப்பு வழக்கறிஞர்கள் இது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினர். காவல்துறையின் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.