மெஸ்ஸியைத் தொடர்ந்து அரேபிய பாரம்பரிய உடையில் ரொனால்டோ கலக்கல்
February 23, 2026

சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் 500-வது கோலை அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, அரேபியர்களின் பாரம்பரிய உடையான ‘பிஷ்ட்’ அணிந்து அவர் காட்சியளித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. “நான் அரேபியர்களில் ஒருவன்” என நெகிழ்ச்சியுடன் கூறி தனது விசுவாசத்தை அவர் வெளிப்படுத்தினார்.
அரேபிய கலாச்சாரத்தில் ‘பிஷ்ட்’ என்பது கௌரவம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மன்னர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே அணியும் இந்த உடையை, 2022 உலகக்கோப்பை வெற்றியில் மெஸ்ஸியும் அணிந்திருந்தார். ஒட்டக ரோமம் மற்றும் தங்க நூல்களால் நெய்யப்படும் இந்த உடை தற்போது யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.