மெக்சிகோவை அதிரவைத்த எல் மென்ச்சோ மரணம் ராணுவ வேட்டையில் கொடூர போதைப்பொருள் மன்னன் வீழ்ந்தான்

மெக்சிகோவை அதிரவைத்த எல் மென்ச்சோ மரணம் ராணுவ வேட்டையில் கொடூர போதைப்பொருள் மன்னன் வீழ்ந்தான்

மெக்சிகோவின் மிகவும் தேடப்பட்டு வந்த ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் தலைவன் நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ் அல்லது ‘எல் மென்ச்சோ’ ராணுவ நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டான். முன்னாள் போலீஸ் அதிகாரியான இவன், கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை உருவாக்கி அமெரிக்காவிற்குள் சட்டவிரோத போதைப்பொருட்களை அனுப்பி வந்தான்.

அவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மெக்சிகோவின் பல மாகாணங்களில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. கார்டெல் கும்பல் வாகனங்களை தீயிட்டு கொளுத்தி நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் தீவிரமாக போராடி வரும் வேளையில், பல இடங்களில் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *