மூன்று ஆண்டுகளில் மூன்று திருமணங்கள் செய்த பீகார் வாலிபர் கைது சமைக்கத் தெரியாது என வினோத விளக்கம்

மூன்று ஆண்டுகளில் மூன்று திருமணங்கள் செய்த பீகார் வாலிபர் கைது சமைக்கத் தெரியாது என வினோத விளக்கம்

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளில் மூன்று திருமணங்கள் செய்த பிண்டு பர்ன்வால் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டப்படி விவாகரத்து செய்யாமல் அடுத்தடுத்து திருமணம் செய்ததாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்ததாகவும் அவரது முதல் இரண்டு மனைவிகள் புகார் அளித்துள்ளனர். வரதட்சணையாகப் பணம் மற்றும் நகைகள் கொடுத்த பிறகும் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாக முதல் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும் தன் மீதான புகார்களை மறுத்துள்ள பிண்டு, தனது மனைவிகளுக்குச் சமைக்கத் தெரியாததாலேயே தான் மீண்டும் திருமணம் செய்ததாக வினோதக் காரணத்தைக் கூறியுள்ளார். மேலும் தன் மனைவிகள் தன் மீது சதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடும்ப வன்முறை மற்றும் மோசடி புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *