முரசொலி அறக்கட்டளை நில விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை நந்தனத்தில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலக நிலம் பஞ்சமி நிலம் என்று கூறப்படும் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1974-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நில ஆவணங்கள் உண்மையில் இல்லை என்றும், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் இது குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திற்கும் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறங்காவலராக இருக்கும் இந்த அமைப்பிற்கு எதிரான வழக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.