முதியவர் காலில் விழுந்த டிவிகே மாவட்ட செயலாளர் முனிசாமியின் நெகிழ்ச்சி செயல்

முதியவர் காலில் விழுந்த டிவிகே மாவட்ட செயலாளர் முனிசாமியின் நெகிழ்ச்சி செயல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் முனிசாமி மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார். வேட்டி பெற வந்த முதியவர் ஒருவர் திடீரென அவரது காலில் விழ முயன்றபோது, பதறியடித்து அவரை தடுத்த செயலாளர், “நீங்க பெரியவங்க, நாங்கதான் உங்க காலில் விழணும்” எனக் கூறி அந்த முதியவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

தொடர்ந்து மேடைக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகளுக்காக கீழே இறங்கிச் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். பின்னர் பேசிய அவர், திமுக அரசு ஊழலில் மூழ்கியுள்ளதாகவும், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தொகுதி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *