மீண்டும் மகுடம் சூடுமா ஆர்சிபி விராட் கோலி மீது இர்ஃபான் பதான் அசாத்திய நம்பிக்கை

மீண்டும் மகுடம் சூடுமா ஆர்சிபி விராட் கோலி மீது இர்ஃபான் பதான் அசாத்திய நம்பிக்கை

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று 18 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்தது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி. மார்ச் 28 முதல் தொடங்கவுள்ள புதிய சீசனிலும் விராட் கோலி அதே உத்வேகத்துடன் செயல்படுவார் என்றும் ஆர்சிபி மீண்டும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

கடந்த தொடரில் 657 ரன்கள் குவித்த கோலியின் தற்போதைய ஆட்டத்திறன் அணிக்கு மிகப்பெரிய பலம் என அவர் குறிப்பிட்டார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீவிரம் கோலியிடம் உள்ளதாகவும், அவரின் அதிரடி ஆரம்பம் அணிக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *