மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தார். தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், மக்கள் மத்தியில் அரசுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு வெற்றியை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதில் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக முதலமைச்சரே இறுதி முடிவு எடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *