மார்ச் 1 முதல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் விதிகளில் அதிரடி மாற்றம்
March 1, 2026

சைபர் மோசடிகளைத் தடுக்க மார்ச் 1 முதல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு ‘சிம் பைண்டிங்’ முறையை மத்திய அரசு அமல்படுத்துகிறது. புதிய விதிகளின்படி, கணக்கு தொடங்கப்பட்ட சிம் கார்டு மொபைலில் செயலில் இல்லையென்றால், அந்த செயலிகளைப் பயன்படுத்த முடியாது. தொலைத்தொடர்புத் துறை வழங்கிய 90 நாள் காலக்கெடு பிப்ரவரி 28-டன் முடிவடைவதால், இந்த மாற்றம் மார்ச் முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக டெஸ்க்டாப் மற்றும் வெப் பதிப்புகள் இனி ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் தானாகவே லாக்-அவுட் செய்யப்படும். மீண்டும் லாக்-இன் செய்ய கியூஆர் கோட் அல்லது மொபைல் சரிபார்ப்பு அவசியமாகும். டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் நிதி மோசடிகளைக் குறைக்க இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.