மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக குளிர் எடுக்கிறதா இதோ மருத்துவர்களின் முக்கிய எச்சரிக்கை

மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக குளிர் எடுக்கிறதா இதோ மருத்துவர்களின் முக்கிய எச்சரிக்கை

இயல்பான வெப்பநிலையிலும் மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக குளிர் எடுத்தால் அதை சாதாரணமான ஒன்றாக கருத வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் வெப்பத்தை சீராக்கும் முறை வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன்களைப் பொறுத்தது. குறிப்பாக ரத்த சோகை அல்லது இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், ரத்தத்தில் ஆக்ஸிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு உடல் போதுமான வெப்பத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது.

மன அழுத்தம் மற்றும் உடலில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அடிக்கடி கைகால்கள் குளிர்ந்து போவது அல்லது உடல் நடுக்கம் எடுப்பது ஏதேனும் பெரிய நோயின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே இத்தகைய அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக நிபுணத்துவ மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவதுடன், சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *