மருத்துவமனை ஐசியூவில் கேங்ஸ்டர் சுட்டுக் கொலை, பீகார் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானது
July 17, 2025

பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பிரபல குற்றவாளி பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை காலை ஐந்து மர்ம நபர்கள் மருத்துவமனையின் ஐசியூவில் நுழைந்து, சந்தன் மிஸ்ரா என்ற நோயாளியை கண்மூடித்தனமாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். பக்சர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தன் சமீபத்தில் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம், கடந்த சில வாரங்களில் நடந்த பல முக்கிய கொலைகளைத் தொடர்ந்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மீண்டும் தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது.