மருத்துவமனையில் இருந்து விரைவில் வீடு திரும்புகிறார் பழம்பெரும் திரைக்கதை ஆசிரியர் சலீம் கான்

மூளை ரத்தக் கசிவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் சலீம் கானின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர் வென்டிலேட்டர் உதவியின்றி சீரான நிலையில் உள்ளார். அவர் தனது குடும்பத்தினருடன் பேசுவதாகவும், எழுந்து உட்காரும் அளவிற்கு தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல்நிலை சீராக இருப்பதால் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாவேத் அக்தர் உள்ளிட்ட திரையுலகினர் இந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல்கள் கசிந்ததற்கு நடிகர் சல்மான் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார். சலீம் கானின் உடல்நலன் தேறி வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.