மனைவியை தவிக்கவிட்டவர் பெண்களுக்கு பாதுகாப்பு தருவாரா என அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்
March 27, 2026

தூத்துக்குடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கீதா ஜீவன், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்தார். சொந்தக் குடும்பத்தைப் பிரிந்து வாழும் விஜய், மேடைகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுவது நகைப்பிற்குரியது என அவர் சாடினார். கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காதவர் எப்படி மக்கள் தலைவராக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் எரிவாயு விலை உயர்வை விஜயால் ஏன் கண்டிக்க முடியவில்லை என வினவிய அமைச்சர், அவரின் மௌனம் யாருக்கான பயம் எனச் சீறினார். ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுக்காதவர் ஆட்சி நடத்தத் தகுதியற்றவர் என அவர் கூறினார். தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அமைச்சர் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.