மனைவியைக் கொன்று 11 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இந்திய இளைஞருக்கு 9 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது எஃப்பிஐ

மனைவியைக் கொன்று 11 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இந்திய இளைஞருக்கு 9 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது எஃப்பிஐ

அமெரிக்காவின் முதல் 10 ‘மோஸ்ட் வாண்டட்’ பட்டியலில் உள்ள இந்தியரான பத்ரேஷ்குமார் சேதன்பாய் படேலைப் பிடிக்க எஃப்பிஐ பரிசுத் தொகையை அதிகரித்துள்ளது. 2015-ம் ஆண்டு மேரிலாந்தில் உள்ள டோனட் கடையில் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய இவரைப் பற்றித் தகவல் தருவோருக்கு தற்போது 1 மில்லியன் டாலர் (சுமார் 9.2 கோடி ரூபாய்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இந்தியா, கனடா அல்லது அமெரிக்காவில் ஏதேனும் ரகசிய நெட்வொர்க் உதவியுடன் பதுங்கியிருக்கலாம் எனப் புலனாய்வு அமைப்பு சந்தேகிக்கிறது. பாதிக்கப்பட்ட பாலக் படேலுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் நடமாடக்கூடிய இந்த ஆபத்தான நபரைக் கண்டால் பொதுமக்கள் நேரடியாகப் பிடிக்க முயலாமல் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *