பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் விடியல் ஆட்சி எங்கே என டிடிவி தினகரன் காட்டம்
March 15, 2026

கோவை புதூர் பட்டாலியன் பிரிவில் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயர் காவல் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரே இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டால், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி சாத்தியமாகும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், திமுக அரசு வெறும் விளம்பர அரசியல் செய்வதாக அவர் விமர்சித்துள்ளார். போதைப்பொருள் விற்பனை மற்றும் பாலியல் குற்றங்களில் காவல்துறையினரின் தொடர்பு இருப்பது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்ட அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு உண்மையான சுதந்திரமும் பாதுகாப்பும் கிடைக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.