பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ் பி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ் பி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோயம்புத்தூர் புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் நான்காம் பிரிவில் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதன் கட்டளையர் செந்தில் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வேலியே பயிரை மேய்ந்த கொடுமையை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக கண்டித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய உயர் அதிகாரியே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது காவல் துறைக்கே பெரும் அவமானத்தை தேடித்தந்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ் இதற்கு திமுக அரசின் மெத்தனப்போக்கே காரணம் என விமர்சித்துள்ளார். செந்தில் குமாருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவி ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி ஒருவர் பேருந்தில் காவலரை காலணியால் அடித்த சம்பவத்தையும் குறிப்பிட்ட அவர் வரும் தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *