பெங்களூருவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வீடியோவை காட்டி ரூ 20 லட்சம் கேட்டு மிரட்டல்

பெங்களூருவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வீடியோவை காட்டி ரூ 20 லட்சம் கேட்டு மிரட்டல்

பெங்களூருவில் காதலர் தினத்தன்று 19 வயது கல்லூரி மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து அவரது காதலன் திக்சன் மற்றும் நண்பன் நிகில் ஆகியோரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனின் அழைப்பை ஏற்று விருந்துக்கு சென்ற மாணவி இந்த கொடூரத்திற்கு ஆளாகியுள்ளார். குற்றவாளிகள் இச்சம்பவத்தை வீடியோ எடுத்து, அதை வெளியிடாமல் இருக்க 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அம்ருதாஹள்ளி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பெங்களூருவில் மேற்கு வங்க பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *